தமிழ்நாட்டில் செல்ப் எடுக்காத ஒரு கட்சி பாஜக... காலி சேர்களுடன் பேசும் அண்ணாமலை- கிண்டல் செய்யும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Mar 3, 2024, 2:17 PM IST

சமூக வலைத்தளங்களை மட்டுமே பாஜக நம்பி அரசியல் செய்கிறது என தெரிவித்த ஜெயக்குமார்,  தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான் என கூறினார். 
 


பாஜக வெட்கப்படனும்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வருடம் முழுவதும் கொண்டாடும் இயக்கம் அதிமுக தான். அதனால் தான் 50 ஆண்டுகள் கடந்தும் அதிமுக உயிர்ப்புடன் உள்ளதாக கூறினார்.

Latest Videos

undefined

பாண்டிச்சேரியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போஸ்டரில் வைத்ததற்கு பாஜக வெட்க படவேண்டும் என  தெரிவித்தவர், அவர்களுக்கு பா ஜ க தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது என கூறினார். 

மோடி வருகையால் எந்த தாக்கமும் இல்லை

திருச்சியில் அண்ணாமலை பேசிய கூட்டத்தை பார்த்தேன் காலி சேர்களுடன் பேசி கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் செல்ப் எடுக்காத ஒரு கட்சியாக பா ஜ க உள்ளது. மோடி தமிழகத்துக்கு வர வர பாஜகவிற்கு  வாக்கு சதவீதம் கூடும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,  மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லையெனவும், மிஞ்சி போனால் 1 அல்லது 2 சதவீதம் வாக்கு சதவீதம் கூடலாம் என தெரிவித்தார். சமூக வலைத்தளங்களை மட்டுமே பாஜக நம்பி அரசியல் செய்கிறது எனவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான் என தெரிவித்தார். 

அதிமுக என்ன குழந்தையா,?

கூட்டணிக்காக பா ஜ க அதிமுகவை மிரட்டுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதிமுக என்ன குழந்தையா? அதிமுகவிடம் இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எடுபடாது. எங்களை யாராலும் மிரட்ட முடியாது என கூறினார். அதிமுக யாரை நம்பியும் இல்லை. எங்களுக்கு என்று தனித்துவம் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். வராவிட்டால் கவலை இல்லையென தெரிவித்தார். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பண நாயகம் மூலம் வெற்றி பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது. அதனை முறியடித்து அதிமுக வெற்றி பெறும். பத்து நாட்களுக்குள் அதிமுக கூட்டணியில் எந்த எந்த கட்சிகள் உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்கனும்.! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் -இறங்கி அடிக்கும் சீமான்

click me!