அதிமுகவை எப்படியாவது கைப்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டங்கள் தோறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த பயனும் இல்லை. ஆகையால் அதிமுகவை எப்படியாவது கைப்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டங்கள் தோறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவை கழற்றிவிட்டு அதிமுகவுடன் புதிய தமிழகம் கூட்டணி? என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் அணியை காலி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்ட செயலாளர் வீகேபி சங்கர். இவர் முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியனின் மகன். அவர் அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுகவில் இருந்த வீகேபி சங்கர், ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின்னர், அவரது அணியில் இணைந்தார். அவருக்கு ஓபிஎஸ் அணியில் நெல்லை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.! குஷியில் இபிஎஸ்.! அதிர்ச்சியில் பிரேமலதா!
தற்போது மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தது ஓபிஎஸ்ஐ அதிர்ச்சியடைய செய்துள்ளது.