எங்களுக்கு தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு... தெலுங்கில் பேசிய திமுக எம்.எல்.ஏ.வின் வாயடைத்த ஜெயக்குமார்!!

By sathish kFirst Published Jul 13, 2019, 1:59 PM IST
Highlights

எங்களுக்கும்  அதுபோல பழமொழி தெரியாது. எனவே தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு” என சொல்லிவிட்டு அமர்ந்தார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், பிரகாஷ் எம்.எல்.ஏ தமிழில் பேசமுடியாமல் தனது பேச்சை முடித்துக்கொண்டார். 

எங்களுக்கும்  அதுபோல பழமொழி தெரியாது. எனவே தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு” என சொல்லிவிட்டு அமர்ந்தார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், பிரகாஷ் எம்.எல்.ஏ தமிழில் பேசமுடியாமல் தனது பேச்சை முடித்துக்கொண்டார். 

மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிற சூழலில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தாலும் சமீபகாலமாக கூச்சல், குழப்பங்கள் இல்லாமல் சைலண்ட்டாகவே நடந்து வருகிறது. நேற்று மாலை நேர கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் வெறும் 21பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள் வேற முக்கிய (இதைவிட வேற முக்கிய வேலை என்னவா இருக்கும்) வேலையாக வெளியில் சென்றுவிட்டார்களாம். திமுக எம்.எல்.ஏ.க்கள் இப்படியென்றால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பற்றி சொல்லவா வேணும்? விவாதத்தில் இருந்த அமைச்சர்கள் சிலரைத் தவிர பலரும் வெளியில்தான் ஹேப்பியா சுற்றி திரிந்தார்களாம். 

சரி விஷயத்துக்கு வருவோம், விவசாயத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் புள்ளிவிவரங்களுடன் தயார் நிலையில் ஆஜரானார்கள்.

விவாதத்தில் திமுக சார்பில் கேள்விகளைக் கேட்கக் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் தளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது, பிரகாஷ் தனக்கு தமிழில் சரியாகப் பேசமுடியவில்லை என்று கூறி தெலுங்கில் பேசுவதாகக் கூறினார். 

உடனே சபாநாயகர் தனபால், அவையில் மொழிமாற்றம் செய்வதற்கான வசதிகள் இல்லை, அதனால் நீங்க பேசுவதும் யாருக்கும் புரியாது, அது பதிவாகாது. எனவே நீங்க எல்லோருக்கும் புரியுற மாதிரி மெதுவா தமிழிலேயே பேசுங்க என சொன்னார். 

சபா நாயகர் தனபால் சொன்னதும் புரியாமல் பிரகாஷ் மீண்டும் தெலுங்கில் பேச முயன்றார். அப்போது உடனே எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், பல மொழி பேசக்கூடிய அம்மா இப்போது இல்லை. அவர் இருந்தாலாவது பல மொழிகளையும் பேசுவார். எங்களுக்கும்  அதுபோல பழமொழி தெரியாது. எனவே தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு” என சொல்லிவிட்டு அமர்ந்தார். ஆனால், பிரகாஷ் எம்.எல்.ஏ தமிழில் பேசமுடியாமல் தனது பேச்சை முடித்துக்கொண்டார். 

click me!