என் மகனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது... மெகா பட்ஜெட் போட்டுக்கொடுத்த சின்னமம்மி!! அக்ராஹாராவிலிருந்து வெளியே வந்த அதே பழைய தினா!!

Published : Jul 13, 2019, 12:40 PM ISTUpdated : Jul 13, 2019, 01:01 PM IST
என் மகனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது... மெகா பட்ஜெட் போட்டுக்கொடுத்த சின்னமம்மி!! அக்ராஹாராவிலிருந்து வெளியே வந்த அதே பழைய தினா!!

சுருக்கம்

மற்றவர்கள் தினகரனைப் பற்றிக் கொளுத்திப் போட்டதால் தினகரனை திட்டியதை நினைத்து கலங்கிய சசிகலா,கண்டவர்கள் சொல்வதால் தான் மகனை திட்டியிருக்கக்கூடாது என உணர்ந்த அவர், அண்மையில் தினகரனை அக்ராஹாராவுக்கு வரச்சொல்லியுள்ளார். அப்போது, நிர்வாகிகளை தக்கவைத்துக்கொள்ளவும் அதிமுகவில் உள்ளவர்களை அமமுகவுக்கு கொண்டுவர சில டிப்ஸ் கொடுத்தாராம் சசிகலா. 

நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட பரிதாபத் தோல்வியால் நொந்துபோயிருந்தார் தினகரன் இந்த தேர்தல் முடிவுக்குப்பின் அமமுக  மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் கொத்துக்கொத்தாக  தங்களது சகாக்களோடு வேறு கட்சிகளுக்கு தாவி வந்தனர்.

இதனால் மனவுளைச்சலில் இருந்த தினகரன், சசிகலாவிடம் சொல்ல முயன்றார். சசிகலாவிடம் முக்கியமான சிலர் சென்றுள்ளனர் அப்போது,  தினகரனை மட்டும் வரச் சொல் என கோபம் கொப்பளிக்க சசிகலா அழைக்க உள்ளே சென்ற தினகரனை கடுமையாக கத்திப் பேசினாராம், அதுமட்டுமல்ல சுமார் 1500 கோடி வரை தேர்தல் செலவுக்காக, விவேக்கிடம் வாங்கினாராம் அதற்க்கு சரியாக கணக்கு காட்டாததால் பயங்கரமாக கோபத்தை முகத்தில் காட்டினாராம். சோகமாக வீட்டிற்கு வந்த தினகரன் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனம் நொந்து போயிருந்துள்ளார். ஆனாலும் தனது முயற்சியிலிருந்து பின் வாங்காத அவர் அமமுகவினர் மாற்று முகாம்களுக்கு செல்வதை தடுப்பதற்காக அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் கடன்காரர்கள் ஆகிவிட்டனர் என்ற அவப்பெயர் நமக்கு வரக்கூடாது என்பதால் தேர்தல் செலவுகளுக்கு விவேக்கிடம் தினகரன் கேட்கும் தொகையை கொடுக்க சொன்னாராம் சசிகலா. இதுல ஸ்பெஷல் என்னன்னா சசிகலாவுக்காக எம்.எல்.ஏ பதவியை இழந்தவர்களுக்கு தனி பட்ஜெட் [போட்டு கொடுத்தாராம் ஆனால் நிர்வாகிகள் சசிகலா கொடுத்த பணத்தை முழுமையாக செலவுகள் செய்யாமல் முக்கிய பாதிப் பணத்தைப் பங்குபோட்டுக்கொண்டனர். இந்த கோல்மால் வேட்பாளர்கள் வழியாகவே பகிரங்கமாக வெளிப்பட்டது. 

இதனையடுத்து கடந்த மாதம் அமமுக தலைமை அலுவலகத்தில் தோல்வி குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவுகளுக்கு முறையான கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தினகரன் கேட்ட ஒரே காரணத்தால், வெயிட்டா அமௌண்ட்டை ஆட்டையைப் போட்ட பலரும் மாற்று முகாம்களுக்கு தாவி விட்டனர்.

சரி போனது போகட்டும், அதிருப்தியால் வேறு கட்சிகளுக்கு செல்லும் நிர்வாகிகளை அமமுகவிலேயே தக்கவைப்பதற்கான முயற்சிகளில் தினகரன் தற்போது ஈடுபட்டுள்ளாராம்.

மற்றவர்கள் தினகரனைப் பற்றிக் கொளுத்திப் போட்டதால் தினகரனை திட்டியதை நினைத்து கலங்கிய சசிகலா,கண்டவர்கள் சொல்வதால் தான் மகனை திட்டியிருக்கக்கூடாது என உணர்ந்த அவர், அண்மையில் தினகரனை அக்ராஹாராவுக்கு வரச்சொல்லியுள்ளார். அப்போது, நிர்வாகிகளை தக்கவைத்துக்கொள்ளவும் அதிமுகவில் உள்ளவர்களை அமமுகவுக்கு கொண்டுவர சில டிப்ஸ் கொடுத்தாராம் சசிகலா. 

இதற்காக மெகா பட்ஜெட் போட்டுக்கொடுத்து அனுப்பியுள்ளார். சின்னம்மாவின் அறிவுரைப்படி, சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கட்சியினர் வீட்டு விழாக்களில் கலந்துகொள்ளும் தினகரன், கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரையில் ஸ்பெஷல் கவனிப்பு நடத்தி வருகிறாராம்.  மீண்டும் கட்சியை பதிவு செய்யும் பணிகளில் மும்முரம் வருகிறாராம் தினகரன்.

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!