என்னைப் பற்றிய மீம்ஸை நானே ரசிப்பேன்!: அடிபடுவது தெரியாமல் அகமகிழ்ந்த ஜெயக்குமார். 

Asianet News Tamil  
Published : Jan 15, 2018, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
என்னைப் பற்றிய மீம்ஸை நானே ரசிப்பேன்!: அடிபடுவது தெரியாமல் அகமகிழ்ந்த ஜெயக்குமார். 

சுருக்கம்

jayakumar press meet about meems

ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறாங்க! என்று சதாசர்வ காலமும் புலம்பிக் கொட்டிக் கொண்டிருந்த எடப்பாடியின் அமைச்சரவை, பொங்கல் நாளில் இருந்து புது புலம்பலை துவக்கியிருக்கிறது. அதுகட்சியை உடைக்க பார்க்கிறாங்க.’ என்பதுதான். நேற்று சேலம் மாவட்டத்தில் முதல்வர் இப்படித்தான் புலம்பினார். அதே நாளில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இதையெ சொல்லி குமுறி தள்ளியிருக்கிறார்.

ஜெயக்குமார் புலம்பியது இதுதான்...

கட்சி தலைமைக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உண்மைதான். ஆனால் அதில் என்ன எழுதியுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. அதை பற்றி தெரியாமல் நான் எந்த கருத்தும் சொலல் முடியாது. மதுசூதனனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையுமில்லை. இருவரும் சுமூகமாக பேசிக் கொள்கிறோம். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் பேசிக்கொண்டோமே!

எங்கள் கட்சியில் பிரச்னை என்று தி.மு..வினரும், தினகரனும்தான் சிண்டு முடியும் வேலையை செய்கின்றனர். எங்கள் கட்சியை பிளவு படுத்த நினைக்கும் தி.மு..வின் எந்த திட்டமும் பலிக்காது. சிண்டு முடிவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

பெரியார் விருதை முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கியது குறித்து சமூக வலைதளங்களீல் நாகரிகமற்ற தகவல்களை பதிவிடுகின்றார்கள். இந்த அநாகரீக செயலை அரசியல் ரீதியாக செய்கிறார்கள். தி.மு..வின் .டி.பிரிவினர்மீம்ஸ்வழியே சமூக வலைதளங்களில் எங்களை கிண்டல் செய்கின்றனர்.” என்று வார்த்தைக்கு வார்த்தை கிண்டல் செய்வர் பின் சற்று கூலாகி...

நாகரிகமான மீம்ஸ் என்றால் என்னை பற்றி வந்தாலும், நானே ரசித்து என் குடும்பத்தினரிடம் காட்டுவேன்.” என்று சிரித்தபடி கூறி முடித்தார்.

மீம்ஸ் என்றாலேவெச்சு செய்வதுதான்’.ஜெயக்குமார், செல்லூர்ராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரையெல்லாம் திணற திணற வெச்சு செய்கிறார்கள் மீம்ஸ் மேக்கர்கள். ஆனால் அடிபடுகிறோம் எனும் உணர்வேயில்லாமல், ‘நாகரிகமான மீம்ஸ்என்று சொல்லியபடி ஜெயக்குமார் தன்னைத்தானே ரசிப்பதுதான் ஸ்வீட் ஷாக்காகி போயுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓபிஎஸ் கூடாரத்தை மொத்தமாக வாரி சுருட்டிய திமுக.. இன்று திமுகவில் ஐக்கியமாகும் வைத்திலிங்கம்
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!