காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தான் ஜெயக்குமார்.. எடப்பாடி மாடு மேய்த்தவர்.. பெங்களூர் புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2022, 9:22 PM IST
Highlights

காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் போன்றதுதான் ஜெயக்குமார் என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி விமர்சித்துள்ளார். எடப்பாடி மாடு மேய்ப்பவர் அவருக்கு நல்ல புத்தி இருக்காது, ஆகவே அவர் ஒருமையில்தான் பேசுவார் என்றும் பெங்களூரு புகழேந்தி  காட்டம் தெரிவித்துள்ளார்.

காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் போன்றதுதான் ஜெயக்குமார் என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி விமர்சித்துள்ளார். எடப்பாடி மாடு மேய்ப்பவர் அவருக்கு நல்ல புத்தி இருக்காது, ஆகவே அவர் ஒருமையில்தான் பேசுவார் என்றும் பெங்களூரு புகழேந்தி  காட்டம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இல்லையே  மோதல் அதிகரித்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதை உதாசினப்படுத்திப் பேசி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்சுக்கும் அதிமுகவுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுகவில் முன்னாள் நிர்வாகியுமான பெங்களூர் புகழேந்தி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  கட்சி அலுவலகத்திற்குள் அவர்களே கொள்ளையடித்துவிட்டு, ஓபிஎஸ் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஓபிஎஸ் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். ஓபிஎஸ் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதிமுக அலுவலகத்திற்கு செல்லலாம், அவருக்கு எல்லா உரிமை உள்ளது.  எப்போதுமே  தராதரம் இல்லாமல் தான் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசிவருகிறார். அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தியதாக ஓபிஎஸ் மீது முதல் முறையாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது என கருதுகிறேன்.

ஓபிஎஸ்  அதிமுக அலுவலகத்தில் திருடிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே அங்கிருந்த அவரது ஆட்கள் கொள்ளையடித்து விட்டனர், உலக கோடீஸ்வரர்களில் ஓபிஎஸ் பெயர் இருப்பதாக ஜெயக்குமார் கூறுகிறார், ஜெயக்குமாரின் வீடு டுமிங் தெருவில் தொடங்கி அடுத்த தெருவில் முடிகிறது இதற்கு பணம் எங்கிருந்து வந்தது.  ஜெயக்குமார் மீது பல வழக்குகள் உள்ளது, ஜெயக்குமார் ஒரு குற்றவாளி, ஆனால் அடுத்தவர் மீது பழி சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டை நான்கு முதலமைச்சர்கள் ஆளுகிறார்கள் என எடப்பாடி ஒருமையில் பேசுகிறார், அவர் மாடு மேய்ப்பவர் அவருக்கு நல்ல புத்தி இருக்காது, அவர் ஒருமையில் தான் பேசுவார். தங்களை கைது செய்யக் கூடாது என்பதற்காக   எடப்பாடியும் ஜெயக்குமாரும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காலில் விழுந்தும், கட்சியை பிளவு படுத்தியுமுள்ளனர். ஓபிஎஸ்சின் காலை பிடித்து மேலே வந்தவர் ஜெயக்குமார், காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு போன்றவர்தான் ஜெயக்குமார். இவ்வாறு பெங்களூர் புகழேந்தி

 

click me!