மெரினா கடலில் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் வைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தான் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேனா சின்னத்திற்கு அதிமுக எதிர்ப்பு
சென்னை இராயபுரத்தில், கடல்சார் மக்கள் நல சங்கமம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், கடலில் பேனா சிலை மற்றும் காற்றாலை அமைப்பதை எதிர்த்து மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மெரினா கடலில் கருணாநிதி நினைவாக அமைக்கப்படவள்ள பேனா சின்னத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறினார்.
undefined
பேனா சின்னத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தான் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். கள்ளச்சாராயம் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளும் கட்சி தான் கள்ளச்சாராயம் விற்றதாகவும், காவல்துறையும், ஆளும் கட்சியும் கைக்கோர்த்ததன் விளைவு இன்று 14 குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாக வேதனை தெரிவித்தார்.
முதலமைச்சராக தவம் இருந்தவர் ஓபிஎஸ்
இதுகுறித்து அமைச்சர் பொன்முடியை நிருபர்கள் கேள்வி கேட்டால், அவர் நிதானமில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர் எந்த சரக்கு அடித்தார் என தெரியவில்லை என விமர்சித்தார். தும்பை விட்டு வாலை பிடிக்கும் விதமாக இன்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்த மரணங்களுக்கு பொறுப்பெற்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
டிடிவி தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பை நகைச்சுவையாக பார்ப்பதாகவும் இது அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஜெயலலிதா மீது உண்மையில் பாசம் இருந்திருந்தால் அவருக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஓ.பி.எஸ் சொல்லி இருக்க வேண்டும். மாறாக, ஜெயலலிதா இறந்தால் தான், தான் முதலமைச்சர் ஆக முடியும் என உள் மனதில் தவமிருந்தவர் ஓ.பி.எஸ் என கூறினார்.
இதையும் படியுங்கள்
சவுக்கு சங்கருக்கு எதிராக களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி.! 4 வழக்குகளை பதிவு செய்து அதிரடி