அவர் ஒரு மண் குதிரை... அதிமுக என்ற ரயிலில் தேவையில்லாத பெட்டிகளை கழற்றி விட்டுவிட்டோம்- சீறும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Jun 26, 2023, 8:14 AM IST

யார் வேண்டுமானாலும் அரசியல் வாங்க, எவ்ளோ கஷ்டம், எவ்ளோ நெலிவு சுழிவுகள் இருக்குனு தெரிஞ்சிக்கோங்க என நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வன் பட ரகுவரன் பானியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். 


திமுக அரசு டிஸ்மிஸ்

சென்னையை அடுத்த புழல் பகுதியில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்ஜிஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றரை கோடி மதிப்பில் இலவச கணினி பயிற்சி மையம்  திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகள் கணினி திறன் பெற்று வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

மேலும், ஆளுநர் டெல்லி சென்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக ஆட்சியில் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்தார். எனவே  விதி 356 யை பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். டிஸ்மிஸ் ராசி திமுக விற்கு அதிகமாக உள்ளதாக கூறினார்.


ஓபிஎஸ் ஒரு மண் குதிரை

ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்கியவர்கள் நிலை என்ன ஆகும்? அதுபோல தான் ஓபிஎஸ் யை நம்பியவர்களின் நிலையும். அதிமுக ரயில் மாதிரி, அதன் என்ஜின் சென்று கொண்டே இருக்கிறது, ஓபிஎஸ் போன்ற தேவையில்லாத பெட்டிகளை கலற்றி விட்டுவிட்டோம். அதனால், நானும் இருக்கேனு காண்பித்துக்கொள்ள ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார்.  500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பதில் அளித்தவர், திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடியது. அதில்  தமிழகத்தில் வருமானம் குறைவாக உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத போது மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோசமிட்டனர்.  ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை என விமர்சனம் செய்தார். 

விஜய் அரசியல்- ஜெயக்குமார் கருத்து

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மைக்காக நேரு விளையாட்டு அரங்கிலா அறுவை சிகிச்சை செய்யமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆபரேசன் நடைபெற உள்ள கலக்கத்தில் உள்ளதாக விமர்சித்தார். நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து பேசிய அவர், யார் வேண்டுமானாலும் அரசியல் வாங்க, எவ்ளோ கஷ்டம், எவ்ளோ நெலிவு சுழிவுகள் இருக்குனு தெரிஞ்சிக்கோங்க என நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வன் பட ரகுவரன் பானியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்

வன்முறை களமாக மாறி இருக்கும் தமிழ்நாடு..! இதற்கான விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும்- இபிஎஸ் எச்சரிக்கை

click me!