ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Oct 6, 2022, 9:20 AM IST

 பெண்கள் பேருந்தில் ஏறினாலே ஓசி பயணத்துக்கு வந்து விட்டாயா? என்று சிலர் கேட்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெண்கள் முகம் சுளிப்பதாகவும் வேதனைப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


முகம் சுளிக்கும் பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எல்லா மதத்தினரையும் சமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிபடுத்தி பேசுபவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. முதலமைச்சர் ஒரு பக்கம் நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரிகள் அல்ல என்று கூறிவிட்டு இந்துக்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை கண்டிப்பதில்லை.  முதலமைச்சரின் நடவடிக்கை  ஏமாற்று நடவடிக்கையாக உள்ளது என குறிப்பிட்டார்.  அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்று பேசியது பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தவர், பெண்கள் பேருந்தில் ஏறினாலே ஓசி பயணத்துக்கு வந்து விட்டாயா? என்று சிலர் கேட்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெண்கள் முகம் சுளிப்பதாகவும் வேதனைப்படுவதாக கூறினார். 

Tap to resize

Latest Videos

அப்போ வைகோ..? இப்போ..?

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலவச திட்டங்களை இலவசம் என்ற பெயரில் அழைப்பதைக் கூட தவிர்த்தவர். விலையில்லா திட்டம் என்று பெயரிட்டு அழைத்தார். அந்த நாகரீகம் திமுகவினரிடம் இல்லை. இவர்கள் ஓசி பயணம் என்று கூறி பொதுமக்களை இழிவுபடுத்தும் செயலில் இறங்கியுள்ளதாக விமர்சித்தார். அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உதயநிதி ரசிகர் மன்றத்துக்கு தலைவர் ஆக்கலாம். அதற்குதான் அவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். உதயநிதியை முன்னிறுத்துவதற்காக திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப் படுகின்றனர். கருணாநிதி காலத்தில் ஸ்ட்டாலினை முன்னிறுத்த வைகோ ஓரம்கட்டப்பட்டார். இப்போதும் அதேதான் நடக்கிறது. அதனால்தான் துணைப்பொதுச் செயலர் பதவியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகினார். அமைச்சர் துரைமுருகன் கூட அதிருப்பதியில் இருப்பதாக தெரிவித்தார்.  

அதிமுக பொதுசெயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.. இபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!

ஓபிஎஸ்க்கு உரிமை இல்லை

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திமுக ஆட்சியில் முடக்குகின்றனர். இதனை செயல்படுத்தினால் எங்களுக்கு நல்ல பெயர் வரும் என்பதால் முடக்குகின்றனர். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறினார்.  பசும்பொன் தேவருக்கு அணிவிக்க வேண்டிய தங்க கவசத்தை வைத்திருக்க ஓ.பி.எஸ். தரப்புக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லையென்றும்  நாங்கள்தான் அதிமுக. அந்த தங்க கவசம் எங்களிடம்தான் வரும் என உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

2 கிலோ முன்னா மற்றும் 5 கிலோ சோட்டு சிறிய சிலிண்டர்கள் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியும்..?

click me!