அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? ஈபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் விளக்கம்!!

By Narendran S  |  First Published Sep 26, 2022, 7:28 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சிப் பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அது குறித்த அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: RSS ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்... உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!!

Tap to resize

Latest Videos

முன்னதாக கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் பல்வேறு வழக்குகளை தொடுத்து வந்தாலும் அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போராடி வருகிறார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

இது மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனிடையே இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது. 

click me!