20 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த ஜெயா டி.வி…. பிரதமர் மோடி வாழ்த்து !!

Published : Aug 23, 2018, 10:21 AM ISTUpdated : Sep 09, 2018, 08:06 PM IST
20 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த  ஜெயா டி.வி…. பிரதமர் மோடி வாழ்த்து !!

சுருக்கம்

ஜெயா  தொலைக்காட்சியின் 20-வது ஆண்டு தொடக்‍கவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ள வாழ்த்து  செய்தியில் , ஜெயா டி.வி. சிறப்பான செய்தி சேவை மூலம் மக்‍கள் மனதில் இடம்பெற்றிருப்பதாகவும், தமிழகத்தின் பண்பாட்டை தொடர்ந்து நிலைநாட்ட பெரிதும் பாடுபடுவதாகவும் கூறியுள்ளார்.

ஜெயா டிவி 19-வது ஆண்டினை நிறைவு செய்து, நேற்று 20-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.. இதனையொட்டி  தலைவர்கள் பலரும் ஜெயா டிவி-க்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,ஜெயா தொலைக்‍காட்சியின் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது தமக்‍கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அதில் பணியாற்றும் அனைவருக்‍கும் வாழ்த்துக்‍கள் தெரிவிப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்‍காட்சிகளில் ஒன்றாகத் திகழும் ஜெயா தொலைக்‍காட்சி, சிறப்பான செய்தி சேவை மற்றும் மக்‍கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் நேயர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதாக பாராட்டியுள்ளார்.

எத்தனையோ தொலைக்‍காட்சிகள் இருந்தபோதிலும், பொதுமக்‍களை மகிழ்விப்பதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் தனது பயணத்தை ஜெயா தொலைக்‍காட்சி சிறப்பான முறையில் மேற்கொண்டிருப்பது தமக்‍கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பண்பாட்டை தொடர்ந்து நிலைநாட்டவும், செய்தித்துறையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, தொலைக்‍காட்சி நிறுவனத்தின் எதிர்கால பயணதிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்‍கொள்வதாகவும் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!