
அரசு அலுவலகங்களில்ஜெயலலிதா படத்தை பயன்படுத்த கூடாது என்பது குறித்து திமுக சார்பில் அளிக்கப்பட்ட முறையீட்டை வழக்காக மதியம் விசாரிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா படத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி திமுக தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு அலுவலகங்களில் இருந்து மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்களை நீக்க கோரிய வழக்கு 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் சார்பில் வக்கீல் பாலு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது ஏற்கனவே பட்டியலில் , உள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தனர்.
தாங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் அதனையும் சேர்த்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் தலைமையிலான முதல் டிவிசன் பெஞ்ச் மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 20 க்கு ஒத்தி வைத்தனர்.