
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது, செய்தியாளர்கள், அவரிடம் கேள்விகளை கேட்டனர். அவர், பதில் கூறாமல் நடந்து சென்றார்.
அப்போது, ‘எம்ஜிஆர் அம்மா தீபா’ பேரவை துவங்கப்பட்டுள்ளதே, இந்த அரசியல் அமைப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்வென்று கேட்டனர்.
அதற்கு “தீபாவா… யார் அது. அவரை யார் என்றே எனக்கு தெரியாது. அவர் அரசியலில் இருந்தாரா என்று எனக்கு தெரியாது. கட்சியை ஆரம்பிப்பது அவரது உரிமை” என்றார்.
வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படுமா என்றும், சிவில் டிஸ்ட்ரிபியூட் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வேதா இல்லம், சிவில் டிஸ்ட்ரிபியூட் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” என கூறிய அவர், தலைதெறிக்க அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த தம்பிதுரை எம்பி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் யார் என்றே எனக்கு தெரியாது என கூறினார். தற்போது தீபவையும் தெரியாது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அவரை தவிர யாரும் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க முடியாது. அவரது அனுமதி இருந்தால், மட்டுமே பேட்டி கொடுக்க வேண்டும். ஆனால் இப்போது, பேச தெரியாதவர்கள் எல்லாம் அதிமுக பேச்சாளர்கள் என டிவி முன் வந்துவிடுகிறார்கள் என பகிரங்கமாக கூறினர்.