ஜவாஹிருல்லா இதுதான் நீ திமுகவை அழிக்கிற லட்சணமா..? 2 சீட்டுக்கு சைலண்ட் ஆயிட்ட..? கொளுத்தும் வேலூர் இப்ராகிம்.

Published : Feb 10, 2022, 10:57 AM IST
ஜவாஹிருல்லா இதுதான் நீ திமுகவை அழிக்கிற லட்சணமா..? 2 சீட்டுக்கு சைலண்ட் ஆயிட்ட..? கொளுத்தும் வேலூர் இப்ராகிம்.

சுருக்கம்

இந்த நிலையில்தான் சில இஸ்லாமியத் தலைவர்கள் ஒருசில சீட்டுக்காக திமுக போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். இப்படி 60 ஆண்டுகாலம் வஞ்சிக்கப்பட்டு இருப்பதை என்னை போன்றவர்கள் எடுத்துக் கூறி வருகிறோம், அதனால் இன்று சிறுபான்மையின மக்கள் சிந்திக்க  ஆரம்பித்துள்ளனர். இந்த ஏமாற்று பேர்வழிக்கு ஒரு சிறந்த உதாரணம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாதான். 

கடந்த 50 ஆண்டு காலமாக திமுக என்ற கட்சி இஸ்லாமியர்களை வஞ்சித்து வருகிறது, அதற்கு இஸ்லாமிய கட்சித் தலைவர்களும் உடந்தை, அதில் ஒருவர்தான் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா என வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். 

திமுகவை அழிப்பதுதான் லட்சியம்  என வீரவசனம் பேசியவர்தான் ஜவாஹிருல்லாஹ் ஆனால் இப்போது வெறும் 2 சீட்டுகளுக்காக அவர் திமுகவுடன் சேர்த்து அரசியல் செய்கிறார் என இப்ராஹிம் காட்டமாக பேசியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது என்ற பொதுவான விமர்சனம் இருந்து வருகிறது.  குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் அதிகம் நடக்கிறது என்றும், சிஐஏ, இந்திய குடியுரிமை சட்டம், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் இஸ்லாமியர் மீது தாக்குதல்  போன்ற வன்முறைச் சம்பவங்களும், இந்துக்களே இஸ்லாமியர்களை கொள்ளுவோம் திரண்டு வாருங்கள் என்று வெளிப்படையாக இந்துத்துவ தலைவர் பேசும் அளவிற்கு நாட்டில் வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்களின் ஆதங்கமாக உள்ளது. 

இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அந்த வகையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் தாங்களும் காவி துண்டு அணிந்து வருவோம் என இந்துத்துவா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியை  இந்துத்துவ மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழங்கியதும், அப்போது அவர்கள் எதிர்த்து நின்று அந்த மாணவியை அல்லாஹு அக்பர் என  உறக்க  முழங்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதற்கான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றமடைய  வைத்துள்ளது. 

மோடி அரசு என்றால்  இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான அரசு என ஒருபுறம் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மறுபுறம் பல இஸ்லாமியர்கள் பிரதமர் மோடிக்கு முன்வந்து ஆதரளிக்கும் சூழல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் அதற்கு சிறந்த உதாரணமாக தமிழ் நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் அமைப்பின்  தலைவரான வேலூர் செய்யது இப்ராஹிம் இருந்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் சிறுபான்மையின மக்களை மத ரீதியாக அல்லாமல், சம ரீதியாக இணைக்க வேண்டும் என்பதே பாஜகவின் அடிப்படை நோக்கம், அந்த அடிப்படையில்தான் இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை எதிர்க்க நான் பாஜகவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளேன் என கூறி தன்னை பாஜகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் அவர்.

தற்போது அவருக்கு பாஜக தேசிய சிறுபான்மை  பிரிவு செயலாளராக அக்கட்சி பொறுப்பு வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துரைத்தும், பாஜகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக மீது திட்டமிட்டு இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என்றும், வேலூர் இப்ராஹிம் ஆதங்கம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில்தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், இங்குள்ள திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக இஸ்லாமியர்களை வஞ்சித்து ஏமாற்றி அரசியல் செய்து வருகிறது என்ற குற்றச் சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அவர் பேசி இருப்பதாவது:- மற்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு கணிசமான இடங்களை பாஜக வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது.  ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் திமுக என்ற கட்சி ஈ.வெ.ராவை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஈவேராவின் சித்தாந்தம் என்னவென்றால், கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என்பதுதான். 

இந்தக் கருத்து  மத நம்பிக்கையில் உறுதிகொண்ட இஸ்லாமியர்களுக்கு நேர் எதிரானது. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுகிற இந்த திமுக என்கிற காட்டுமிராண்டி கட்சியுடன்தான் இன்றைய இஸ்லாமிய கட்சி தலைவர்கள் கைகோர்த்து செயல்படுகின்றனர். அந்த அளவுக்கு மக்களை பேசிப்பேசியே ஏமாற்றிய மோசடி தலைவர்கள்தான் இவர்கள். இவர்களால் இஸ்லாமியர்களுக்கு எந்த பயனும் இல்லை, மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்கு செலுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் அவர்களுக்கான திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது, இதுவரை இஸ்லாமியர்களுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்க வில்லை. ஆனால் மாறாக இஸ்லாமியர்களை பயமுறுத்தும் வேலையை அதாவது, பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் உங்களுக்கு அது பறிபோய்விடும், இது பறிபோய்விடும் என்று சொல்வதில்லையே குறியாக இருந்து வருகிறது திமுக. இதைதான் 60 ஆண்டு காலமாக அந்தக் கட்சி செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் சில இஸ்லாமியத் தலைவர்கள் ஒருசில சீட்டுக்காக திமுக போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். இப்படி 60 ஆண்டுகாலம் வஞ்சிக்கப்பட்டு இருப்பதை என்னை போன்றவர்கள் எடுத்துக் கூறி வருகிறோம், அதனால் இன்று சிறுபான்மையின மக்கள் சிந்திக்க  ஆரம்பித்துள்ளனர். இந்த ஏமாற்று பேர்வழிக்கு ஒரு சிறந்த உதாரணம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாதான். இன்று அவர் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் இதே ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லீம் லீக் என்ற காட்சியை ஆரம்பிக்கும்போது திமுகவை எதிர்ப்பதற்காகத்தான் இந்த காட்சி ஆரம்பிக்கப்படுகிறது என முழங்கினார். திமுகவை அரசியல் அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். திமுக இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தது என பேசினார், திமுக ஆட்சியில் தான் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். திமுகவால் தான் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது, திமுகவை ஒழிப்பதற்கு தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்படுகிறது என அவர் கூறினார்.

இதை நான் சொல்லவில்லை, ஜவாஹிருல்லா தான் சொன்னார். இப்படி பேசி கட்சி ஆரம்பித்து விட்டு இப்போது திமுகவுடன் இணைய்துவிட்டார். இந்த கட்சிகளால் சிறைக்குப் போன இஸ்லாமியர்கள் அதிகம், இப்படி எல்லாம் பேசி இவர்கள்தான்  ஒருசில சீட்டுக்காக திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார். இப்போது அவர் சாட்சாத் திமுக வின் சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறார். அப்படியென்றால் எதற்காக இந்த காட்சியை (ஜவாஹிருல்லா)நீங்கள் ஆரம்பித்தீர்கள். திமுகவை அழிகும் லட்சணம் இதுதானா? என சரமாரியாக வேலூர் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!