முன்னாள் முதலமைச்சர் மரணம் !! மருத்துவமனையில் உயிரிழந்தார்!!

Published : Jun 10, 2019, 07:53 AM IST
முன்னாள் முதலமைச்சர் மரணம் !! மருத்துவமனையில் உயிரிழந்தார்!!

சுருக்கம்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் .ஜானகிராமன்  உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன்.  திமுகவை சேர்ந்த ஜானகிராமன் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார். 

நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன்.  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி எம்.பி. அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி  காலமானார். 

புதுச்சேரியில் மறைந்த ஜானகிராமன் உடலுக்கு முதல்வர் நாராயணசாமி  உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

நாளை மாலை அவரது உடல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அவரது சொந்த கிராமமான ஆலத்தூரில் அடக்கம் செய்ப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!