
அவையில் தன்னை யாரும் புகழ வேண்டாம் என தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் சிந்திக்க தொடங்கியுள்ளனர்...அதாவது,
'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று ஓபிஎஸ் அவர்களை அதிமுக எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் புகழாராம் சூட்ட, கொஞ்சம் டென்ஷனான ஓபிஎஸ்,யாரும் என்ன புகழ வேண்டாம் என தெரிவித்து உள்ளாராம்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று,மறைந்த உறுப்பினர்கள்,ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கேள்வி பதில் நேரம் ஒதுக்கப்பட்டது.அப்போது கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை திறம்பட கையாண்டதை குறித்து பேசி ஓபிஎஸ்ஸை 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று புகழ்ந்து பேசினார்.
கேள்வி நேரத்தின் போது புகழுரை கூடாது என எதிர்கட்சியினர் கோஷமிட்டனர்.பின்னர் சபாநாயகர் சமாதானப் படுத்த, உடனடியாக அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்,"சபையில் பேசும்போது உறுப்பினர்கள் யாரும் என்னை புகழ வேண்டாம்.இது ஜெயலலிதாவின் அரசு அனைத்து புகழும் ஜெயலலிதாவையே சேரும்" என்று கூறி எம்எல் ஏக்களின் வாயை அடைத்தார்.
தற்போது எதிர்கட்சியான திமுகவும் வெளிநடப்பு செய்துள்ளது.இதற்குமுன்னதாக சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரனும் வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.