தினகரனைத் தொடர்ந்து திமுகவும் வெளிநடப்பு..!

 
Published : Jan 09, 2018, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
தினகரனைத் தொடர்ந்து திமுகவும் வெளிநடப்பு..!

சுருக்கம்

dmk MLAs walk out

திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கியதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் பேச தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தினகரன் வெளிநடப்பு செய்தார். 

இதையடுத்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர், ஜெ.அன்பழகன், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நினைவகமும், மணிமண்டபமும் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவரது பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினகரன் வெளிநடப்பை தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் இனிமேல் கலந்துகொள்ள மாட்டேன் என தினகரன் கூறிவிட்டார். ஆனால், மீண்டும் திமுக உறுப்பினர்கள், உள்ளே சென்று பணியாற்றுவோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!