
ஜல்லிக்கட்டு அனுமதிக்கும் சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், தமிழக அரசால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசு ஆணை பிறப்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அவசர சட்ட முன் வடிவு, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என நேற்று அறிவித்தார். இதைனையடித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.