"ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வேண்டும்... செய்யாவிட்டால் உங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" - ஸ்டாலின் ஆவேசம்

First Published Jan 13, 2017, 12:05 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர மத்திய அரசு  உடனடியாக அவசர சட்டம் கொண்டுவந்து நடத்த வேண்டும், அவசர சட்டம் கொண்டு வருவது ஒன்றும் உங்களுக்கு புதிய விஷயமல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் விளக்கி பேசினார்.செய்ய தவறினால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.

இந்த பிரச்சனையில் உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும். அவசர சட்டம் கொண்டு வருவது ஒன்றும் உங்களுக்கு  புதிதல்ல . இதுவரை இந்தியாவில் 659 அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 58 அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய மோடி ஆட்சியில் 22 அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 இன்சுரன்ஸ் துறையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது மோடி அரசு , நீட் தேர்வு அதை கட்டாயம்மென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மாணவர்கள் தேர்வை ஒரு வருடம் தள்ளி வைத்து மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

ஆதார கார்டு கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள்ளது. ஆனால் அதை மத்திய அரசு மதிக்கிறதா? இன்று ஆதார் அட்டையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் உயிராதாரமான காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்புக்கு எதிராக ஒரு அபிடவிட்டை போட்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

சமீபத்தில் மத்திய சுற்று ச்சுழல் அமைச்சர் ஜல்லிக்கட்டுக்காக நள்ளிரவில் கூட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆகவே மத்திய அரசை உரிமையோடு கேட்கிறேன், பணிவோடு கேட்கிறேன் ,  உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் உங்களையும் , இங்கு ஆளும் மாஎநில அரசையும் தமிழகத்தின் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி சொல்லிகொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

click me!