"அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அலட்சியம் செய்ததால் தான் ஜல்லிக்கட்டுக்கு இந்த நிலை... எங்களை குறை சொல்வதா??" - ஸ்டாலின் கண்டனம்

First Published Jan 13, 2017, 11:41 AM IST
Highlights

திமுக ஆட்சி இருக்கும் வரை சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு பொட்டியில் அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் காட்டிய அலட்சியம் காரணமாக தான் ரத்து செய்யப்பட்டது. இதை மறைத்து திமுக மீது குற்றம் சாட்டுவதா என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தனர்.

மாவட்ட தலை நகரங்களில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மகிழ்சியோயோடு பொங்கலை கொண்டாட வேண்டிய நேரத்தில் ஒரு போராட்ட களத்தில் குதிக்க வேண்டிய நிலை. எப்படியும் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். 

ஆனால் அதிர்ச்சியான செய்தியாக இப்போது தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தமிழர்களின் உணர்வுக்கு எதிராக அமைந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுத்தான் ஜல்லிக்கட்டு. கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை.

அண்ணன் துரை முருகன் சொன்னது போல் கலைஞர் ஆட்சியிலும் ஜல்லிக்கட்டுக்கு பிரச்சனை வந்தது. அன்று கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்றத்தில் சட்டத்தின்நெளிவு சுளிவுகளை கடைபிடித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நாம் ஆட்சியில் இருக்கிறப்வரை வெற்றி கரமாக ஜல்லிக்கட்டு நடந்தது.

அதன் பின்னர் அதிமுக அரசு பொறுப்பேற்றது. அவர்கள் ஆட்சியில் வழக்கம் போல் சட்டத்தின் படி அந்த  விதிமுறைகள் படி ஜல்லிக்கட்டை நடத்தாமல் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுக்களை அமைத்து அந்த குழு தமிழகம் வந்து ஆராய்ந்தது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று மொத்தமாக முழுமையாக தடை விதித்தனர். ஆனால் இதையெல்லாம் மறைத்து எங்களால் தான் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்று அதிமுகவும் , பாஜகவும் கூறி வருகின்றனர். ஒரு வாதத்திற்காக  வைத்து கொள்வோம். அதன் பிறகு உங்கள் இருவராட்சியும் தானே இருக்கிறது இப்போது ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி எடுக்க வேண்டியது தானே.

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து நானும் , அண்ணன் துரைமுருகனும் பேசினோம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று ஓபிஎஸ் கூறினார். ஆனால் நடக்கவில்லை. அதன் பின்னர் நமக்கு நாமே பயணத்தில் ஜல்லிக்கட்டு பொரச்சனை பற்றி பேசும் போது ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் அப்படி பிரச்சனை ஏற்பட்டால் திமுக போராட்டம் நடத்தும் , நானே தலைமை தாங்குவேன் என்றேன்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்காததற்காக திமுக சார்பில் என் தலைமைஅயில் உண்ணாவிரத் போராட்டம் அறிவித்தோம். அன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் அந்த முயற்சிகள் நடந்து வருகிறது. ஆகவே உண்ணாவிரப்போர்ரட்டம் வேண்டாம் என்று கலைஞருக்கு கடிதம் எழுதி கேட்டு கொண்டதால் போராட்டத்தை தள்ளி வைத்தோம். 

ஆனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த் ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்க வாய்பில்லை என்ற நிலையில் அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளோம். இந்த ஆண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்து விடும் அதன் பிறகு திராவிட இயக்கம் அழிந்து போகும் என்று கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

click me!