ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம் - ஒரே மேடையில் ஸ்டாலின் கனிமொழி

 
Published : Jan 13, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம் - ஒரே மேடையில் ஸ்டாலின் கனிமொழி

சுருக்கம்

தமிழகம் முழுதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பெருவாரியாக நடந்து வருகிறது. திமுக சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் முதன் முறையாக ஸ்டாலினும் கனிமொழியும் ஒரே மேடையில் ஆஅர்ப்பட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை காளைகளை வதைப்பதாக கூறி தடை செய்தனர். உச்சநீதிமன்றமும் தடை செய்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. தடையை நீக்க தமிழக அரசு உள்ளிட்ட 9 அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் பொங்கலுக்கு முன்னர் தீர்ப்பை தர முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் வேறு வடிவத்தை நோக்கி சென்றுவிட்டது. ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு பெருகிவருவதை அடுத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின . 

சென்னையில் திமுக சார்பில் இன்று ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கனிமொழியும் , ஸ்டாலினும் ஒரே மேடையில் ஒன்றாக கலந்துகொண்டனர். ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை. துரை முருகன் , மு.க.ஸ்ட்ஆலின் இருவர் மட்டுமே பேசினர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு