ஜல்லிக்கட்டு திமுக ஆர்ப்பாட்டம்....!!! - மத்திய அரசை குறை கூறாத துரை முருகன்

First Published Jan 13, 2017, 11:54 AM IST
Highlights

சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை ஒரு சிறு அளவில் கூட திமுக துணைப்பொதுச்செயலாளர் துரை முருகன் விமர்சனம் செய்யவில்லை. சுய்பராணம் , அதிமுக அரசின் மீது பாய்வது என்பதாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது.  

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாலியுறுத்தி திமுக சார்பில், சென்னை ராஜாஜி சாலை, கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது வருகிறது. இதில், திமுக துணை பொது செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என திட்டமிட்டு, 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னதாகவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என அலங்காநல்லூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு வந்தவர் நம்முடைய செயல் தலைவர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என அனைத்து கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். இதேபோல் அனைத்து பத்திரிகை துறையினரும், ஊடக துறையினரும் ஆதரவு தெரிவித்தனர்.

மத்தியில் அமைச்சராக இருந்தவர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என கூறினார்கள். தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என கூறினார். மத்திய அமைச்சரவையில் இருப்பவர்கள் நடந்தே தீரும் என்றார்கள்.

ஆனால், நேற்று உச்சநீதிமன்றம் பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடமுடியாது என கூறிவிட்டது.

 இதனால், மத்திய அரசை சேர்ந்தவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பே இல்லை என கூறிவிட்டனர். இதுபற்றி பேச முதலமைச்சர் டெல்லி செல்ல வேண்டும். ஆனால், ஒ.பன்னீர்செல்வம் சென்றாரா..? அவர் சென்றது ‘கன்னி டூர்’. இதற்கு யார் காரணம்..? ஆளுங்கட்சியின் கையால்காதனம்.

கருணாநிதி ஆட்சியின் போது, இதே நிலை நீடித்தது. அப்போது, நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தேன். வெளிநாட்டில் இருந்த என்னை உடனடியாக டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்தும்படி தலைமை ஆணையிட்டது. அதன்படி, நான் சென்னைக்கு வராமல், நேரடியாக டெல்லிக்கு சென்றேன்.

அங்கு மத்திய அமைச்சரவையில் இருந்தவர்களிடம், ஜல்லிக்கட்டு குறித்து விளக்கி பேசினேன். அதில், அவர்களுக்கு அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அவர்களுக்கு எடுத்துரைத்த பின், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதுபோல் இந்த ஆட்சியில் எந்த சட்டத்துறை அமைச்சராவது, டெல்லி சென்றார்களா..? அல்லது முதலமைச்சர், டெல்லி சென்று பேசினாரா.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாராம், பண்பாடு, நீண்டகால பாரம்பரிய விளையாட்டு ஆகும். இங்குள்ள அமைச்சர்கள் யார் பேசுவார்கள் இதுபற்றி. அவர்களுக்கு இங்கேயே பெரிய ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஒன்று சசிகலா ஜல்லிக்கட்டு, மற்றொன்று ஒ.பி.எஸ். ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில், அவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி எப்படிபேசமுடியும். பார்க்க முடியும். விவகாரம் முற்றிவிட்டது.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், இதுபற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவரை அணுகி இருக்கலாம். நாங்களும் தமிழகத்தில்தான் இருக்கிறோம். நீங்களும் தமிழகத்தில் தான் இருக்கிறீர்கள். தமிழக பாரம்பரியம் பற்றி பேச, ஏன் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கவில்லை.

எனக்கு இதை எப்படி அணுகுவது என தெரியவில்லை. உங்களுடைய ஆலோசனையை கூறுங்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என ஏன் பேசவில்லை.

திமுக ஆட்சியில் இப்படிதான் நடந்ததா? தலைவர் கருணாநதி அனைவரையும் அழைத்து பேசுவார். அதில், அனைவரின் கருத்துகளையும் கேட்டு, ஆலோசனை நடத்துவார். ஆனால், இங்குள்ள ஆளுங்கட்சிக்கு சொந்த புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. கேட்கும் புத்தியும் இல்லை.

இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்கவும், சாதிக்கவும் விரைவில் நல்ல ஆட்சி அமையும். விரைவில் உங்கள் அனைவருக்கும் திறமையான முதல்வர் வருவார். அவர்தான் நமது செயல் தலைவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!