
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும், பொது மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி திமுக சார்பில், செயல் தலைவர் மு.க.ஸ்டலின் தலைமையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தார். கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பாதகையை வைத்துள்ளார்.
இதையொட்டி மாம்பலம் ரயில் நிலையம் அருகில் ஏராளமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.