தமிழர்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசு பீட்டாவை தடை செய்யும் - கனிமொழி  

 
Published : Jan 19, 2017, 08:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
தமிழர்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசு பீட்டாவை தடை  செய்யும் - கனிமொழி  

சுருக்கம்

தமிழர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு பீட்டாவை தடை செய்ய வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பான முடிவு விரைந்து எடுக்க டெல்லியில் பிரதமரை  தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் அதற்கு நாங்கள் துணை நிற்போம். முதல்வர் உடனடியாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்,

காவேரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவை அம்மாநில அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று மக்களின் அரசாக செயல்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசே அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி அறிவித்து விட்டார் ஆகவே தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிப்பு அளித்து உடனடியாக பீட்டாவை தடை செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்