ஹிமாசல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்வு!

First Published Dec 24, 2017, 4:02 PM IST
Highlights
jairam thakur elected for himachal pradesh cm by bjp


ஹிமாச்சலப் பிரதேச மாநில முதல்வராக பாஜக.,வின் ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஹிமாசலப் பிரதேச சட்டமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக., ஆளும் காங்கிரஸை வீழ்த்தி பாஜக., ஆட்சியைக் கைப்பற்றியது. 

ஹிமாச்சலில் பாஜக., அமோக வெற்றி பெற்றபோதிலும், அக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக யாரையும் தேர்வு செய்ய முடியாமல் திணறியது பாஜக., காரணம், முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரேம்குமார் துமல், தேர்தலில் வெற்றி பெறவில்லை. தனிப்பட்ட வகையில் தோல்வியை தழுவினார். இதனால், மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்தது.  

இதனிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் முதல்வராகப் போட்டியிடக் கூடும் என்று கூறப்பட்டது.  அவர், ஹிமாச்சல் பிரதேச அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நன்கு அறிந்தவர் என்ற வகையில் அவரே முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேச முதல்வராக பாஜக.,வின் ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

click me!