ஆக்கிரமிப்பில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் தள்ளுங்கள்.. அன்புமணி ஆவேசம்!

By vinoth kumarFirst Published Dec 9, 2023, 11:47 AM IST
Highlights

 சென்னையைச் சுற்றி 100 கிலோமீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்குங்கள். மன்னர்கள் தான் ஏரிகளை உருவாக்க வேண்டுமா மக்களாட்சியிலும் உருவாக்கக் கூடாதா? என அன்புமணி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

தேர்தல் நேரங்களில் ரூ.500, ரூ.1000 வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அவர்களே தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம் என அன்புமணி கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்;- மழை வெள்ள பாதிப்பு 50 ஆண்டு திராவிட கட்சிகளின் தோல்வி என்று நான் கருதுகிறேன். இதற்கு காரணம், பெரும்பாலும் 200 - 300 ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்து ஏரிகள் காணாமல் போயிருக்கிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏரி ஆக்கிரமிப்பிற்கு அனுமதி வழங்குகியிருக்கிறார்கள். நீர்நிலைகளுக்குள் மண்ணை கொட்டி நிரப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தில் அனுமதி அளித்த அதிகாரிகள் சிறையில் தள்ளுங்கள். பணியிடம் நீக்கம் என்பது செய்யக் கூடாது. யார் அனுமதி கொடுத்தார்களோ அந்த அதிகாரியை சிறையில் பிடித்து போட வேண்டும். அப்போதுதான் பயம் வரும். 

இதையும் படிங்க;- மழை வெள்ளத்தை தொடர்ந்து சென்னை மக்களை நெருங்கி வரும் அடுத்த ஆபத்து! அலறும் அன்புமணி ராமதாஸ்.!

நகரமயமாக்கல் என்பது திராவிட கட்சிகளின் தோல்வி இது. தமிழ்நாட்டின் வளர்ச்சி கிடையாது. மக்கள் எங்கெங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அங்கேயே அவர்கள் வாழ வேண்டும். 55 ஆண்டுகளாக இவர்களுடைய கொள்கை முடிவுகளில் கிராமத்திலிருந்து அனைவரும் நகரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லை. குடிநீர் இல்லை. விவசாயம் கிடையாது. கட்டுமானங்கள் கிடையாது. நிவாரணம் தொகை நிச்சயமாக வழங்க வேண்டும். குடும்பத்திற்கு10,000 வழங்க வேண்டும் நிவாரண உதவித் தொகை வழங்கினாலும் பாதிப்பை மக்கள் மறக்கக்கூடாது. தேர்தல் நேரங்களில் ரூ.500, ரூ.1000 வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அவர்களே தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். 

நீர்த்தேக்கங்கள் உருவாக்குங்கள் அதற்கு பாமக உறுதுணையாக இருக்கும். சென்னையைச் சுற்றி 100 கிலோமீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்குங்கள். மன்னர்கள் தான் ஏரிகளை உருவாக்க வேண்டுமா மக்களாட்சியிலும் உருவாக்கக் கூடாதா? என அன்புமணி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடுங்கள்.. ராமதாஸ்.!

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அது எங்கே அமைப்பது என்பது தான் கேள்வி பரந்தூர் பகுதியில் அமைப்பது என்று 4800 ஏக்கர் என்று தான் கூறினார்கள். ஆனால் தற்போது 5700 ஏக்கர் என்று கூறுகிறார்கள். கூடுதலாக ஆயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்த போகிறோம் என்று கூறுகிறார்கள். எனவே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது. திருப்போரூர் பகுதியில் 5000 ஏக்கர் அரசு நிலம் தரிசு இருக்கின்றது. அங்கே அமைக்க வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!