jai bhim: இந்து என்றால் இளக்காரமா.. அந்தோணிசாமி பெயர் குருமூர்த்தியாக மாறியது ஏன்? கொதிக்கும் அர்ஜூன் சம்பத்.!

By vinoth kumarFirst Published Nov 16, 2021, 10:34 AM IST
Highlights

மாணவி கவிதாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சம்சத்நிஷா, பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் சினிமாவில் ஜாதிய வன்மத்தை தூண்டுகிற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை மாற்றியமைக்க வேண்டும். 

பிளஸ் 2 மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மேலபள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகர்சாமி- அழகு தம்பதியினர். இவர்களது மகள் கவிதா (17). இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் கவிதா சோகமாக இருந்ததை பார்த்த அவரது தாயார் அழகு, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டபோது வீட்டுப்பாடம் செய்யாததால் தனது வகுப்பறை ஆசிரியர் சம்சந்த் நிஷா தன்னை அடித்ததாகவும் அதனால் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தாயிடம் கூறியும் மனவேதனையில் இருந்த  கவிதா கடந்த 4ம் தேதி எலி மருந்தை குடித்துள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மகள் இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிகிச்சைக்காக பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக  மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து கவிதா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவிதாவின் தாயார் அழகு இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவுக்கு காரணமான ஆசிரியர் சம்சந்த் நிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் கூறினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மாணவி கவிதாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சம்சத்நிஷா, பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் சினிமாவில் ஜாதிய வன்மத்தை தூண்டுகிற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை மாற்றியமைக்க வேண்டும். 

சூர்யா கொடுக்கின்ற விளக்கம் ஏற்றுகொள்ளும் வகையில் இல்லை. கதாநாயகன் பெயர் சந்துரு என்றும், போலீஸ் அதிகாரி பெயர் பெருமாள்சாமி என்றும் உண்மை சம்பவத்தில் உள்ளதை வைத்துள்ளனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் அடித்து கொலை செய்தவர் பெயர் அந்தோணிசாமி என்பதை மாற்றி குருமூர்த்தி என்று வைத்துள்ளனர். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றார்.

click me!