ஜெய் பீம் திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் ரஞ்சித் டீமை சேர்ந்தவர்.. தோண்டி எடுக்கும் இந்து மக்கள் கட்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 5:37 PM IST
Highlights

ஜெய் பீம்  திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் கதிர், இயக்குனர் பா ரஞ்சித் இன் குழுவைச் சேர்ந்தவர் என்றும், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்றும் இந்து மக்கள் கட்சியை குற்றம் சாட்டியுள்ளது.

ஜெய் பீம்  திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் கதிர், இயக்குனர் பா ரஞ்சித் இன் குழுவைச் சேர்ந்தவர் என்றும், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்றும் இந்து மக்கள் கட்சியை குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமல்ல இயக்குனர் ஞானவேல் அந்த படத்தின் வட்டார வழக்கு மொழியை எழுதிக்கொடுத்த கவிஞர் கண்மணி  குணசேகரனின் பெயரையே அந்த படத்தில் ஊர் தலைவருக்கு வைத்து அவரை அசிங்க படுத்தி உள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் மாறிமாறி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி பாமகவுக்கு ஆதாரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த செந்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெய் பீம் திரைப்பட குழு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:- 

ஜெய் பீம்  திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் கதிர் யாரென்றால் அவர் இயக்குனர் பா.ரஞ்சித்தின் குழுவைச் சேர்ந்தவர். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்ல இயக்குனர் ஞானவேல் அந்த படத்தின் வட்டார வழக்கு மொழியை எழுதிக்கொடுத்த கவிஞர் கண்மணி  குணசேகரனின் அனுகி அவரிடம் உதவி பெற்றார். பின்னர் அந்த படத்தில் ஊர் தலைவருக்கு கண்மணி குணசேகரனின் பெயரையே வைத்து அவரையும் அசிங்க படுத்தி உள்ளார். இவர்கள் செய்தது முழுக்க முழுக்க திட்டமிட்ட ஒரு சதி, அதேபோல உதவி ஆய்வாளராக வரும் குருமூர்த்தியுடன் இருக்கும் காவலருக்கு கிருபாகரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கிருபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் ஒரு வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்.  மொத்தத்தில் இந்த படத்தில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெயரும் திட்டமிட்டு வன்மத்தோடு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த படத்தில் பார்வதி அம்மாவின் பெயரை செங்கேணி என மாற்றப்பட்டுள்ளது. அதிலும் ஒரு சூழ்ச்சியுள்ளது. எதிர்காலத்தில் அந்த படத்தில் அவர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காக அப்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய தந்திரம் என்றே சொல்லலாம்.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னவென்றால் இரண்டு மிகப்பெரிய சமூகங்களில் ஒன்றான பட்டியல் சமூகத்தை அவர்கள் மதமாற்றம் செய்து விட்டார்கள். ஆனால் வன்னியர் சமூகத்தினர் பெரும்பாலும் மதம் மாறுவது என்பதே இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த இரு சமூகங்களுக்கு இடையே மோதல், சண்டை, பிரச்சனை, போலீஸ், வழக்கு என மாற்றிவிட்டால் அந்த நேரத்தில் அவர்களை அனுகி இலகுவாக மதம் மாற்றி விடலாம் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஜெய் பீம் படத்தின் துவக்கத்தில் ஏராளமான கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சூர்யா தனது அகரம் அறக்கட்டளையில் இருந்து இன்னொரு அறக்கட்டளைக்கு அதாவது இருளர் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறார். ஒரு அறக்கட்டளையில் இருந்து இன்னொரு அறக்கட்டளைக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பது  சட்டம். அப்படியிருக்கும்போது இவர் எப்படி ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் என்பதே கேள்வி.

தவறு செய்துவிட்டு அதற்கு வருத்தம் தெரிவிப்பதற்கே பத்து நாட்கள் கடந்துவிட்டது. வருத்தம் தெரிவிப்பதற்கே இவ்வளவு யோசனை, திரையரங்குகளுக்கு படம் வரவில்லை என்ற தைரியத்தில் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் திரையரங்குகளுக்கு வராமல் உங்கள் படம் இருந்துவிடாது என்பதை கவனதில் கொள்ளுங்கள். மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டு நீங்கள் அமைதியாக இருப்பீர்களா.? சூர்யா மட்டுமல்ல சூர்யாவின் தந்தையும் இப்படித்தான் நடந்து கொண்டார், திருப்பதி கோயிலை பற்றி தவறாக பேசினார். தொடர்ந்து சூர்யாவின் குடும்பத்தில் ஜோதிகாவாக இருக்கட்டும், சிவகுமாராக இருக்கட்டும், அவரது  பினாமியாக இருக்கும் ஞானவேலாக இருக்கட்டும். அனைவரும் இந்துமத எதிர்ப்பில் குறியாக இருக்கிறார்கள். இந்துக்களை தாக்கி பேசுகின்ற செயலில் இந்த குடும்பம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சூர்யா... நீ மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, வசதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இரண்டு தமிழ் குடிகள் அடித்துக் கொள்ள  வேண்டுமா.? இதுதான் உங்கள் எதிர்பார்ப்பா. இவ்வாறு பேசியுள்ளார்..
 

click me!