அவனாடா நீ... கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ்... இந்தி சர்ச்சையை கிளப்பிய ஜெய் பீம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 8, 2021, 3:56 PM IST
Highlights

சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் தமிழில் பேசாமல் இந்தியில் பேசியதற்காக ஒருவரை அறைந்ததாக பிரகாஷ் ராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் தமிழில் பேசாமல் இந்தியில் பேசியதற்காக ஒருவரை அறைந்ததாக பிரகாஷ் ராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

குறிப்பிட்ட காட்சி இந்தி பேசும் மக்களுக்கு எதிராக இருப்பதாக பலரும் புகார் கிளப்புகின்றனர். இது குறித்து புரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார். ’’ஜெய் பீம் படம் குறித்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தி உள்ளனர். 

’’குறிப்பிட்ட காட்சி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஜெய் பீம் போன்ற படத்தைப் பார்த்த பிறகு, அவர்கள் பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்கவில்லை. அவர்கள் அநீதியைப் பார்த்து பயப்படவில்லை, அவர்கள் அறைந்ததை மட்டுமே பார்க்கிறார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குப் புரிந்தது. இது அவர்களின் மனநிலையை அம்பலப்படுத்துகிறது. அதாவது, சில விஷயங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்."

உதாரணமாக, தென்னிந்தியர்களுக்கு இந்தி திணிக்கப்படும் கோபம் உண்டு. ஒரு வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்தும் அவரிட விசாரிக்கும் போது இந்தியில் பேசுகிறார் என்றால் அவரிடம் அந்த அதிகாரி வேறு எப்படி நடந்துகொள்வார்? ஹிந்தியில் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டாமா? அதுதான் என்னுடைய எண்ணமும் கூட, அந்த எண்ணத்தில் நானும் உறுதியாக இருக்கிறேன். 

சிலருக்கு, திரையில் நான் நடித்ததால், அறைந்த காட்சி எரிச்சலூட்டி இருக்கும். அவர்களின் எண்ணம் இப்போது நிர்வாணமாகத் தோன்றுகிறது. அவர்களின் நோக்கம் வெளிப்பட்டதால், பழங்குடி மக்களின் வலி அவர்களை அசைக்கவில்லை. நான் சொல்வது ஒன்றுதான். உனக்கு அவ்வளவுதான் புரிஞ்சுதா டா, நீ தானா அவன்?  இப்படிப்பட்ட சாதி வெறியர்களுக்கு எதிர்வினையாற்றுவதில் எந்த அர்த்தமுமில்லை" என்று அவர் தெரிவித்தார்.  

திருடுப்போன நகைகளைப் பற்றி விசாரிக்கும் பொருட்டு, அடகுக்கடை வைத்திருப்பவரிடம் பிரகாஷ்ராஜ் விசாரிக்கும் போது, தமிழ் தெரிந்த அந்த கடைக்காரர் இந்தியில் பேசுவார். அவரை பளார் என கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ், தமிழ்ல பேசு என்பார். இந்த காட்சி ஒரு சாராரிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இருளர் சமூகத்தினரின் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. அவர்கள் மீது காவல்துறையினர் எப்படி மோசமாக நடந்து கொள்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டியது இந்த திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தின் உண்மையான ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி ஆகிய இருவரைப் பற்றியும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த மணிகண்டனுக்கும் ஹீரோயினாக நடித்த லிஜோமோல் ஜோஸ்-க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் எனும் அளவுக்கு ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இருளர் பழங்குடியினருக்கு காவல்துறையின் அட்டூழியங்கள் மற்றும் சாதி அநீதிகள் பற்றி படம் பேசுகிறது. இந்தப்படம் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக வெளியிடப்பட்டது. இந்தப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளனர்.

click me!