புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்பாளரா? மு.க.ஸ்டாலினின் அதிரடி சரவெடி பதில்..!

By vinoth kumarFirst Published Jan 19, 2021, 2:49 PM IST
Highlights

புதுச்சேரி திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் முன்னிறுத்தப்படுவதாக வரும் செய்திகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் முன்னிறுத்தப்படுவதாக வரும் செய்திகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு சேர்ந்து புதுவையிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம், புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதே கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் நீடித்தது. இந்நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி என்று புதுச்சேரி திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். அதேபோல், ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி மாநில திமுக பொதுச் செயலாளராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் புதுவை அருகே உள்ள வழுதாவூராகும். அவரது பல்வேறு தொழில்களும் புதுவையில் உள்ளன. எனவே அவருக்கு புதுவை மக்களோடு அதிக தொடர்புகள் உண்டு. ஜெகத்ரட்சகனை பொறுப்பாளராக அறிவித்ததால் திமுக ஏதோ ஒரு திட்டத்துடன் அவரை களம் இறக்கி இருப்பதாக பேசப்பட்டது. பொறுப்பாளர் பதவியை ஜெகத்ரட்சகன் ஏற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் புதுவையில் நடந்தது. இதற்காக திமுகவினர் பிரம்மாண்ட பேரணியையும் நடத்தினார்கள். பின்னர் அங்குள்ள ஓட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநிலம் சொர்க்கப் பூமியாக இருந்தது. ஆனால், தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறவைப்பேன். அப்போதுதான் புதுச்சேரிக்கு மீண்டும் வருவேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று ஜெக்த்ரட்சகன் ஆவேசமாகப் பேசினார். இதனால், புதுவை காங்கிரஸ்- திமுக கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கியது.

இதுகுறித்து பிரபல நாளிதழ் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்;- தமிழகத்தின் அரசியலை விட புதுச்சேரியின் அரசியல் மாறுபட்டது என்ற வகையில், கழகத்தை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுவை தி.மு.க. அப்பகுதிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது கழகப் பணிகள்தான்; தேர்தல் பணிகள் அல்ல. புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

click me!