அஸ்தமனமாகும் முதல்வரின் கனவு... பதவியை பிடிக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வரின் மகன்..!

By vinoth kumarFirst Published May 20, 2019, 2:25 PM IST
Highlights

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. இந்த 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

* சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது. 

* ஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

* லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

* இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

* சில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

பெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவே அமைந்துள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. 

click me!