ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்..! 9 ஆண்டு கால அரசியல் பாதையின் வெற்றி பின்னணி..!

By ezhil mozhiFirst Published May 30, 2019, 1:28 PM IST
Highlights

ஆந்திர முதல்வராக முதல் முறையாக பதவி ஏற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்..! 9 ஆண்டு கால அரசியல் பாதையின் வெற்றி பின்னணி..! 

ஆந்திர முதல்வராக முதல் முறையாக பதவி ஏற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சார்பாக திமுக சார்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டி கடந்து வந்த அரசியல் பாதை..! 

2004 காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம் அரசியலில் கால் பதித்தார். 2009 இல் காங்கிரஸ் சார்பாக கடப்பாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று வெற்றி பெற்றார். 2009இல் ஜெகன் தந்தையும் முதல்வருமான ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மரணமடைந்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு தங்களது ஆதரவாளர்களை திரட்டி  தந்தையின் நினைவாக ஒரு பேரணியை நடத்தினார். காங்கிரஸ் மேலிடத்திலிருந்து அனுமதி பெறாமல் பேரணியை நடத்தியதாக எழுந்த சர்ச்சையில் கட்சியிலிருந்து விலகி, 2010 - 2011 ஆம் ஆண்டு  ஒய்எஸ் ஆர் கட்சியை தொடங்கி வைத்தார்.  

பின்னர், 2011 கடப்பா மக்களவை இடைத் தேர்தலில் ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெகன் வெற்றி பெற்றார். 2012ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் 125 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். 2014 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் 2014ஆம் ஆண்டு தந்தையின் ஆஸ்தான தொகுதி புலிவெண்ஸ்லாவில்நின்று வெற்றி பெற்றார்.

பின்னர்  2014 ஆம் ஆண்டு ஆந்திர பேரவை தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெகன்மோகன் ரெட்டி. 

பின்னர் தற்போது  நடைபெற்ற ஆந்திர சட்ட மன்ற தேர்தலில்,151 இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றி 9 ஆண்டுகளுக்கு பின்னர்  முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்று உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!