சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் திடீர் மாற்றம்... பின்னணியில் அமைச்சர்? வெளியானது பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published May 27, 2020, 1:57 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் போன்ற முக்கிய பதவிகளுக்கு இவர் பெயர் ஏற்கனவே பேசப்படும் அளவுக்கு முக்கிய அதிகாரியாக இருந்தார் ஜாபர் சேட். வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிபிசிஐடி தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணமே அமைச்சர் ஒருவர் காரணமே என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுக சார்பில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த மாவட்ட  ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து மே 12ம் தேதி மக்களின் மனுக்களை அளித்தார். 

பின்னர், செய்தியாளர்ளிடம் பேட்டியளித்த அவர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான என்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணியையோ அழைப்பதில்லை. ஆனால், ஆளங்கட்சியை சேர்ந்த கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இது தொடர்பாக கேட்ட போது அவர்கள் தகவல் கிடைத்து வருகின்றனர். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் கூறுகிறார் என்றார். 

மேலும், பேசிய அவர் இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர்கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி தன்னை இழிவாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனது எதிரியான செந்தில்பாலாஜியை எப்படி கைது செய்திட வேண்டும் என்று அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் கங்கணம் கட்டியிருந்தார். 

இதனிடையே,  செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கரூரில் இருந்து இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதே உடனடியாக இந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதுகுறித்து மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், சிபிசிஐடி தரப்பில், இந்த புகாரின் கீழ் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள முகாந்திரமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதன்,காரணமாகவே ஜாபர் சேட் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!