இந்த விஷயத்தில் அதிமுக-திமுக கள்ளக் கூட்டணி... பகீர் கிளப்பும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published May 27, 2020, 12:52 PM IST
Highlights

மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில்;- தூர்வாரும் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் இந்தப் பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பணிகள் நடைபெறுவது போல காட்டுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தனர். அதன்பிறகும் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்ற தகவல்கள் வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் ஏனோ தானவென்று அரைகுறையாக தூர்வாரினால், மேட்டூர் அணையிலிருந்து வரும் நீர் காவிரியின் கடைமடைப் பகுதிகளை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலைப்படுவதாகத் தெரிவிக்கும் தினகரன், “நிலைமை இப்படியிருக்க ஊர் ஊருக்கு ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களும் கள்ளக் கூட்டணி அமைத்துக்கொண்டு சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஆட்சியாளர்கள் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களை குறைந்தபட்சம் 50 சதவிகித மானியத்தில் வழங்குவதற்கும், நாள்தோறும் மும்முனை மின்சாரத்தை குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்  தினகரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

click me!