கொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..!

Published : May 27, 2020, 12:30 PM IST
கொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..!

சுருக்கம்

கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.    

கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, செங்குன்றம் சாலையில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை  பல்பொருள் அங்காடி  புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ’’கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படுகிறது. ஊரடங்கை கருத்தில் கொண்டு, இதுவரை  2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி, உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுகிறது. கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுகிறது’’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு