72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு முயன்ற ஜாக்டோஜியோ நிர்வாகிகள்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 2:36 PM IST
Highlights

இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால், உண்ணாவிரத பந்தலை காவல்துறையினர் அகற்றினர். மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட  முயன்ற மாநில நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு முயன்ற ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். கடந்த 2019 ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பணி மாறுதலை ரத்து செய்து பழைய இடத்திலேயே பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 

இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால், உண்ணாவிரத பந்தலை காவல்துறையினர் அகற்றினர். மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட  முயன்ற மாநில நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே உள்ள திறந்தவெளி இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன் கூறுகையில், "அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முயன்ற ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அந்த அறிவிப்பு ஏமாற்றமானதே. ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மாநில அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண முன்வர வேண்டும்", என்றார்.
 

click me!