
ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்குகளை வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
காவலர்களை தாக்கியது வாகனங்களை தீயிட்டு கொளுத்தியது உள்ளிட்ட ஒரு சில குற்ற வழக்குகளை தவிர மற்றவர்கள் மீது போட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதல்வர்.பழனிசாமி அறிவித்துள்ளார்.