வரும் 11 ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்.. சிடி ரவி முன்னிலையில் இணைய திட்டம்.?

Published : Feb 08, 2021, 02:23 PM IST
வரும் 11 ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் கராத்தே தியாகராஜன்.. சிடி ரவி முன்னிலையில் இணைய திட்டம்.?

சுருக்கம்

ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற தலைமை அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.  

வரும் 11ஆம் தேதி சென்னை மாநகர முன்னாள் துணை மேயரும் தீவிர ரஜினி ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் தன்னை இணைத்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்த்து ஏமார்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கராத்தே தியாகராஜன் ஒருவர். நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக  இருந்தவர் ஆவார். இவர் கராத்தே பயிற்சியாளர் என்பதால் இவரது  புனைப் பெயராகவே அது மாறியது. கடந்த 2002 முதல் 2005 வரை இவர் சென்னைக்கு பொறுப்பு நகரத் தந்தையாகப் பதவி வகித்தார். 2001-ல் கருணாநிதி கைதுக்கு காரணமான மேம்பாலங்கள் கட்டுமான புகாருக்கு பின்னணியாக இருந்த அவர் கராத்தே தியாகராஜன்.  2005-ல் இவர் மீது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 6 மாதங்கள் கழித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

அங்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த அவர், கடந்த 2019ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இவர், தற்போது ரஜினி கட்சி ஆரம்பித்ததில்  இருந்து பின்வாங்கி உள்ள நிலையில், வேறு ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக  அறிவித்தார். அது அதிமுக அல்லது பாஜகவாக இருக்கலாம் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி இவர் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற தலைமை அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தீவிரமாக ரஜினி ஆதரவாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த கராத்தே தியாகராஜன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!