திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் தான்... உண்மையை உறக்க சொன்ன அமைச்சர்..!

Published : Feb 09, 2021, 03:17 PM IST
திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் தான்... உண்மையை உறக்க சொன்ன அமைச்சர்..!

சுருக்கம்

தனிக்கொடி, தனிக்கட்சி, தனிப்பாதை என அதிக தொல்லை கொடுத்தார். தனிக்கொடியோடு தனிச்சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது.

எதையும் சந்திக்கத் தயார் என்ற சூழலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று சென்னை வந்தடைந்தார். பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலாவுக்கு அமமுகக மற்றும் அதிமுக தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த சூழலில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்க சசிகலா சட்டப் போராட்டம் நடத்துவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக் குழுவைக் கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்;- அதிமுகவிற்கு திமுகவைவிட அதிக தொல்லை கொடுத்தது டி.டி.வி.தினகரன்தான். தனிக்கொடி, தனிக்கட்சி, தனிப்பாதை என அதிக தொல்லை கொடுத்தார். தனிக்கொடியோடு தனிச்சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது. எதையும் சந்திக்கத் தயார் என்ற சூழ்நிலையில்தான் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?