நீங்க தர்மயுத்தம் தொடங்கியதே சசிகலாவுக்கு எதிராக தான்.. ப்ளாஸ்பேக்கை சொல்லி ஓபிஎஸ்ஐ அலறவிடும் கே.பி.முனுசாமி.!

By vinoth kumar  |  First Published Aug 18, 2022, 1:28 PM IST

சசிகலாவும், அவருடைய குடும்பமும் வரக்கூடாது என்பதற்குதான் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை இப்போது ஓ.பன்னீர்செல்வம் காட்டியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஒன்றினைவது பற்றி இன்று கருத்து கூறும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்று ஏற்றிருப்போம். 


ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தான் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகாலம் முதல்வராக இருந்துள்ளார். அவரோடு பயணித்திருக்கிறோம், ஒற்றுமையாக அவருடன் ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய தலையாய எண்ணம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும்...! இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்து கூடவே ஆப்பு வைக்கவும் தயாரான ஓபிஎஸ்..!

எங்களுடைய எண்ணம், செயல், இணைப்பு இணைப்பு இணைப்புதான். நாங்கள் இந்த அறைகூவலை விடுப்பதன் நோக்கமே, எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. இதற்குமுன் நடந்தவைகளை நாங்கள் தூக்கி எறிந்துவிட்டோம். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சசிகலாவும், டிடிவி தினகரனும் இருக்கின்றனர் என ஓபிஎஸ் தெரிவித்தார். சசிகலா தொடர்பான ஓபிஎஸ் கருத்துக்கு கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால் இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பதுதான்.சசிகலாவும், அவருடைய குடும்பமும் வரக்கூடாது என்பதற்குதான் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை இப்போது ஓ.பன்னீர்செல்வம் காட்டியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஒன்றினைவது பற்றி இன்று கருத்து கூறும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்று ஏற்றிருப்போம். 

இதையும் படிங்க;- இபிஎஸ் கனவில் மண்ணைவாரி போட்டதற்கு இதுதான் காரணம்.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதுதான்..!

மாறாக  மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த கட்சி அலுவலகத்தை சூறையாடினார். அதற்கு தலைமை ஏற்றவர் தான் ஓபிஎஸ், அப்போது ஏன் இந்த ஒற்றுமை கருத்து அவருக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். கட்சிக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வெளியில் இருக்கிறார்கள். கட்சியில் ஆதாயமடைந்தவர்களை தான் அவர் ஒன்றிணைய கூறுகிறார். எனவே ஆதாயமடைந்தவர்கள் கட்சிக்கு தேவையில்லை என்றும் உழைப்பவர்கள் தான் தேவை என்றும் கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ராமச்சந்திரன்.. ஜெயலலிதா.. ஜெயச்சந்திரன்.. அதிமுகவை காக்கும் ரூபங்கள்.. புல்லரிக்கும் ஓபிஎஸ் மகன்..!

click me!