
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
* உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
- விஷால்
* டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கம்பீரமான பெயர் இருக்கக்கூடாது என்கிற மத்திய அரசின் முடிவை தமிழர்களின் உணர்வுகள் மீதான மொழி வெறி தாக்குதல் என்றே கருதுகிறேன்!
- ஸ்டாலின்
* உயர்கல்வித்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்தும், கடந்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் நடந்த பல்கலை நியமனங்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். நேர்மையாக செயல்படும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இதற்கு பரிந்துரை செய்யவேண்டும்.
- அன்புமணி
* கர்நாடக பவன், ஆந்திர பவன், ஒடிசா பவன் என டெல்லியிலுள்ள மற்ற மாநிலங்களின் தங்கும் இடங்கள் அழைக்கப்படும் போது தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மட்டும் மாற்ற முயற்சிப்பது, மத்திய அரசின் சகிப்புத்தன்மை பற்றி சந்தேகிக்க வைக்கிறது.
- திருநாவுக்கரசர்.
* நதி நீர் இணைப்பு பற்றி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்காதது, மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
- விஜயகாந்த்
* கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தம்பித்துரைக்கு ஓட்டு கேட்டதற்காக கரூர் தொகுதி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
- செந்தில் பாலாஜி.
* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவுமில்லை.
- தம்பிதுரை.
* பல்கலைகழக பணி நியமன விஷயத்தில் யார் முறைகேடு செய்திருந்தாலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஓ. பன்னீர்செல்வம்.
* காஷ்மீர் எங்களுடையது. எங்கள் நாட்டின் ஒரு பகுதி அது. பாகிஸ்தான் எங்களிடமிருந்து அதை அபகரிக்க முயலுகிறது. பாகிஸ்தான் ஒரு முறை சுட்டால், நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்.
- ராஜ்நாத் சிங்
* கமல்ஹாசன் வசனத்தை மாற்றி மாற்றி பேசுவார். ஒரு எதிர்ப்பு வந்ததும் ஒரு வசனத்தை பேசுவார். மற்றொரு எதிர்ப்பு வந்ததும் அதற்கு வேறு ஒரு வசனத்தை பேசுவார்.
- தமிழிசை சவுந்திரராஜன்.