சிக்கிய டைரி...குட்கா ஊழல் நாற்பது இடங்களில் அதிரடி ரெய்டு!!! ஜார்ஜ் வீடும் தப்பவில்லை!

Published : Sep 05, 2018, 10:41 AM ISTUpdated : Sep 09, 2018, 07:57 PM IST
சிக்கிய டைரி...குட்கா ஊழல் நாற்பது இடங்களில் அதிரடி ரெய்டு!!! ஜார்ஜ் வீடும் தப்பவில்லை!

சுருக்கம்

தமிழகம் மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ள குட்கா போதை பொருள் முறைகேட்டில் தொடர்ச்சியாக தமிழக காவல்துறை அதிகாரிகள் வீட்டில் இன்று சிபிசிஐடி அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. 

தமிழகம் மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ள குட்கா போதை பொருள் முறைகேட்டில் தொடர்ச்சியாக தமிழக காவல்துறை அதிகாரிகள் வீட்டில் இன்று சிபிசிஐடி அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. 

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் நாற்பது இடங்களில் தற்போது ரைடு நடைபெற்று வருகின்றது. 

காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளும் தப்பவில்லை.காவல் துறை உயர் அதிகாரியான ஜார்ஜின் வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்றுவருகிறது. 

கடந்த 2017ம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாக செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன்பின், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அவரது வீடு, கல் குவாரி, கல்லூரி உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதன்பின்னர், குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி, டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை எவ்வித குளறுபடியும் நடைபெறாமல் இருக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதையொட்டி கடந்த சனிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் ரூ.12 லட்சம் பெற்றார் என வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்னர்.


இந்நிலையில், சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். இதையொட்டி சென்னை கீரின்வேஸ் சாலையில், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் வீடு, முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், குட்கா அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரணையின்போது, அவரிடம் இருந்து டைரி கைப்பற்றியதாகவும், அதில் உள்ள தகவலின்படி சோதனை நடப்பதாகவும் தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!