கல்வியை தாயாக கருதிய ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது அநியாயம்.. தலையில் அடித்து கதறிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 3:48 PM IST
Highlights

பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு. இன்று சட்டமன்றத்தில் பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதா குறித்து பேசுவதற்கான வாய்ப்பு கேட்டோம் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

கல்வியை தாயாக கருதிய ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், ஜெயலலிதா பல்கலைக்கு நிதி , இடம் ஒதுக்கவேண்டியது தற்போதைய அரசின் கடமை என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திருவல்லிக்கேணி சமுதாய நலக் கூடத்தில்  தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் சமுதாய நலக்கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம், 

பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வு. இன்று சட்டமன்றத்தில் பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதா குறித்து பேசுவதற்கான வாய்ப்பு கேட்டோம் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்தியாவில் உள்ள முதல்வர்களில் கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை மாற்றங்களை கொண்டு வந்தார். 2011ல் மாநில அரசின் வருவாயில் 4ல் ஒரு பங்கை கல்விக்கு  ஒதுக்கினார். மாணவர்களுக்கு 16 வகை இலவச உபகரணங்கள் தந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் 2011 ல் 27 சதவீதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கையை , 50 விழுக்காடுக்கு மேல் உயர்த்தி தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாக்கியவர் ஜெயலலிதா கல்வியை தாயாக கருதினார்.  

ஜெயலலிதா  கலை அறிவியல் கல்லூரி உட்பட  70 கல்லூரிகளை கொண்டுவந்தவர். அண்ணாமலை பல்கலைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது நிதி ஒதுக்கி  காப்பாற்றியவர் ஜெயலலிதா. அம்மா உணவகம் பெயரை மாற்றவில்லை என்கிறீர்கள், இன்று இருக்கும் பிரச்சனை விழுப்புரம் பல்கலை பெயர் பிரச்சனைதான். இப்போதுதான் பல்கலையை உருவாக்கினோம். அதற்கான நிதி, இடத்தை ஒதுக்க வேண்டியது தற்போதைய அரசின் வேலை " என்று கூறினார். பின்னர் மண்டபத்திலி்ருந்து ஓபிஎஸ் மற்றும் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
 

click me!