விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது முக்கியமில்ல.. அவர்களின் இன்னல்களை போக்க வேண்டும்.. கொதிக்கும் மநீம

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 3:17 PM IST
Highlights

ஆனால் தொடர்ச்சியாக நாம் அறியும் தகவல்கள் இதற்கு மூரணாகவும், வேதனையூட்டுவதாகவும் இருக்கிறது. வயலில் வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு சரியான நேரத்தில் உரமிட வழி இல்லாமல் விவசாயிகள் தமிழகமெங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். 

வளரும் பயிருக்கு உரமில்லை, அறுவடையான நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை, விவசாயிகளின் இந்த  வேதனைக்கு எப்போதுதான் விடிவு என மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளர் மயில்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த அரசு எப்போதும் இல்லாத வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட போது, அது நமது மக்கள் நீதி மையம் கட்சியாளும், நமது தலைவர் நம்மவராலும்முழுமனதோடு பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அறியும் தகவல்கள் இதற்கு மூரணாகவும், வேதனையூட்டுவதாகவும் இருக்கிறது. 

 வயலில் வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு சரியான நேரத்தில் உரமிட வழி இல்லாமல் விவசாயிகள் தமிழகமெங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் அறுவடையான நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு ஆர்வம் காட்டாததால், மயிலாடுதுறை பகுதியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதைவிடக் கொடுமை, தேனி பகுதியில் அரசு கொள்முதல் செய்தால் நெல்லை சரியாக பாதுகாக்காமல் மழையில் நனைய விட்டு அது முளைத்து கிடக்கும் அவலநிலை.

திமுக அரசு விவசாயிகள் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தும் நோக்கில்தான் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறது என்று நாம் நினைத்தால், அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது இப்போது தெரிகிறது. எனவே ஆளும் திமுக அரசு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையுடன், உர தட்டுப்பாட்டை நீக்கியும், விளைந்த நெல்லை கொள்முதல் செய்தும் அவர்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!