அதிர்ச்சியில் எஸ்.வி சேகர்.. அலறவிட்ட நீதிபதி.. மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா.? சரமாரி கேள்வி..

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 1:49 PM IST
Highlights

இந்நிலையில் எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதிபதி நிஷா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த வழக்கை ரத்துசெய்ய முடியாது என உயர்நீதி மன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. குறுஞ்செய்தியை படிக்காமல் ஏன் forward செய்தீர்கள் என்றும், forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? எனவும் நீதிபதி நிஷா பானு எஸ்.வி சேகரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை காமெடி நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மகளிர் அமைப்பினர் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல அவரது வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மைதீன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

அதன் மீது விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என எஸ்.வி சேகரை தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதனையடுத்து தனக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் முகநூலில் வந்த தகவலை படிக்காமல் அப்படியே தான் பார்வர்டு செய்து விட்டதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் பெண்கள் மீது தான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும், பதிவை நீக்கி மன்னிப்புக் கோரி பிறகும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதிபதி நிஷா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு விவகாரத்தில் எஸ் வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறினார். அதேபோல் எஸ்.வி சேகர் படிக்காமல் பார்வர்டு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடுமா என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய ஒரு அவதூறான பதிவை படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள் என்றும் நீதிபதி நிஷா பானு எஸ்.வி சேகரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கு ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக அவர் மறுத்துவிட்டார். இது எஸ் வி சேகர் மற்றும் அவரது தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!