சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பாமக தான் காரணம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் சலசலப்பு..!

By vinoth kumarFirst Published Aug 31, 2021, 1:45 PM IST
Highlights

திமுக சந்தர்ப்ப சூழ்நிலையால் வெற்றி பெற்றது , செல்வாக்கினால் அல்ல. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடையே அதிமுகவிற்கு எழுச்சி இருந்தது. ஆனால் சமுதாயத்தின் அடிப்படையில் கூட்டணி அமைந்ததால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. 

சமுதாயத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதே ஒழிய மக்கள் செல்வாக்கினால் அல்ல என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான அண்ணா தொழிற்சங்க தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி பங்கேற்று ஆலோசனை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திமுக சந்தர்ப்ப சூழ்நிலையால் வெற்றி பெற்றது , செல்வாக்கினால் அல்ல. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடையே அதிமுகவிற்கு எழுச்சி இருந்தது. ஆனால் சமுதாயத்தின் அடிப்படையில் கூட்டணி அமைந்ததால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. 

அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. இதனால் திமுக ஆட்சியை பிடித்தது. நாம் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம், ஆனால் செல்வாக்கை இழக்கவில்லை. தமிழக மக்கள் திமுக ஆட்சியில் மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகின்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் கிராம புறங்களில் அதிமுகவுக்கு பலம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.  

பாமக உட்பட கூட்டணி கட்சிகளால் தோல்வி அடைந்தோம் என வீரமணி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியை சந்தித்தது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!