சாதிவாரியாக அதை செய்யுங்கய்யா... ஓங்கி ஒலிக்கும் பாமக ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2020, 11:45 AM IST
Highlights

சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான குரல் சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் இருந்து எழ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான குரல் சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் இருந்து எழ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமைக்கப்பட்ட 412 பயிற்சி மையங்களும் இதுவரை செயல்படத் தொடங்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை மாணவர்களின் நலனுக்கான இந்த பயிற்சி மையங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே  எழுதலாம் என கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும்,  5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வது தான் முழுமையான நிம்மதி அளிக்கும்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று அகிலேஷ்சிங் யாதவ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு  என்ற பா.ம.க.வின் கோரிக்கை மிகச்சரியானது; அதற்கு ஆதரவு பெருகுகிறது என்பதையே  இது காட்டுகிறது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று அகிலேஷ்சிங் யாதவ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பா.ம.க.வின் கோரிக்கை மிகச்சரியானது; அதற்கு ஆதரவு பெருகுகிறது என்பதையே இது காட்டுகிறது!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான குரல் சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் இருந்து எழ வேண்டும்'' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

click me!