
அதிமுக இரட்டை இலை சின்னத்தை சார்ந்த பிரேமா, மீனாள் ஆகிய இரு பெண்களால் வாக்கு சாவடியில் அடிதடி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர்.
இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் முடிவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் டிடிவி ஆதரவாளர்களும் அதிகாரிகாரிகளும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னத்தை சார்ந்த பிரேமா, மீனாள் ஆகிய இரு பெண்களால் வாக்கு சாவடியில் அடிதடி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒருவர் மையத்தை விட்டு வெளியே வரும்போது எங்க அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா என கேள்வி எழுப்பிக்கொண்டே ஆக்ரோஷமாக இடத்தை காலி செய்தார்.