சசி குடும்பத்தை விரட்டி விரட்டி வளைக்கும் சிறை: விதியல்ல முன் செய்த சதியாம்!

Asianet News Tamil  
Published : Nov 17, 2017, 06:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
சசி குடும்பத்தை விரட்டி விரட்டி வளைக்கும் சிறை: விதியல்ல முன் செய்த சதியாம்!

சுருக்கம்

It is not the fate that was made before M Natarajan

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்... என்கிறது சிலப்பதிகாரம்! இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சசி குடும்பத்துக்கு துல்லியமாய் பொருந்துகிறது. சசிகலா தன் கைக்குள்ளேயே பொத்தி வைத்த உறவுகளுக்கு மட்டுமில்லாமல், தள்ளி வைத்து குடும்ப அரசியல் செய்த கணவர் நடராஜனுக்கும் சேர்த்தல்லவா பொருந்துகிறது. 

சசிகலாவை சந்திக்க போயஸ்கார்டனுக்குள் நுழைய கூடாது என்று எம்.நடராஜனுக்கு கட்டளையிடப்பட்டு இருந்தாலும் கூட அ.தி.மு.க.வில் ஒரு அதிகார மையமாகதான் இருந்தார் எம்.நடராஜன். தேர்தல் காலங்களில் சீட் பெற்றுத்தர வேண்டி ஒரு பெரும் கூட்டமே பெசண்ட் நகரிலிருக்கும் நடராஜனை சூழ்வது வழக்கம். அ.தி.மு.க.வின் சீட்களில் நடராஜனுக்கென்று தனி கோட்டா உண்டென்றும் சொல்வார்கள். 

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த நிமிடத்திலிருந்து நடராஜன் லேசாக அ.தி.மு.க.வில் லாபி செய்து பார்த்தார். அது தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமுங்கியே போனார். சசி சிறை சென்ற பின் திரைமறைவில் சில நகாசு வேலை பார்த்துக் கொண்டிருந்தார் எம்.என். இதற்கிடையில் உடல் நலம் குன்றிய நடராஜன் அதிதீவிர சிகிச்சையின் உச்சம் வரை சென்று, கிட்னி மாற்று சிகிச்சை செய்து பிழைத்தார். 

அவர் டிஸ்சார்ஜ் ஆகி சில நாட்கள்தான் ஆகிறது இப்போதுதான் மெல்ல தெளிந்து வந்து எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகளெல்லாம் கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இன்று அவருக்கு ஷார்ப் ஷாக் ஒன்றை தந்திருக்கிறது ஸ்பெஷல் கோர்ட். 
என்னவாம் அது?...

சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு 1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு இருந்தது. இதில் இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டைக்கு அவர் மேல் முறையீடு போயிருந்த நிலையில் இன்று அந்த தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். 
இது நடராஜனை உறைய வைத்திருக்கிறது. 

சசிகலா அண்ட்கோவை சிறைதண்டனை, ரெய்டு ஆகியன ஓட ஓட துரத்திக் கொண்டிருக்கும் நிலையில் நடராஜனும் இன்று அந்த ரிலே ரேஸில் கலந்து கொண்டிருப்பது அ.தி.மு.க.வை அதிர வைத்திருக்கிறது. சசிகலா வெளிப்படையாக அ.தி.மு.க.வினரை ஆட்டிவைத்தபோது, நடராஜன் திரைமறைவில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை ஆட்டி வைத்ததாக விமர்சனம் உண்டு. அதில்  அக்கட்சியினர் பொங்கித்தான் கிடந்தனர். சசி சிறை சென்றபின் எடப்பாடி - பன்னீர் அணி அவரை ஒதுக்கி வைத்து உபத்திரவம் செய்வது போல் நடராஜனுக்கும் ரிவிட் வந்து சேருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேயிருந்தனர் அவர்கள். இந்நிலையில்தான் இந்த அதிரடி தீர்ப்பு வந்து சேர்ந்திருக்கிறது. 

இதைத்தான் முன் செய்த பாவங்கள் தேடி வந்து தண்டனை தருமென்று சொல்லி அர்த்தமாய் பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
 

PREV
click me!

Recommended Stories

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!