கொலை குற்றம் செய்தவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.. திமுக கருத்துக்கு எதிராக கே.எஸ்.அழகிரி..!

By vinoth kumarFirst Published Nov 7, 2020, 12:52 PM IST
Highlights

கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர , தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், 7 அபர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த விகாரம் தொடர்பாக ஆளுநர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி;- பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல. 7 பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அழுத்தம் தரும் நிலையில் கே.எஸ்.அழகிரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும், 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றக் கொள்வோம். கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர , தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. கொலை குற்றவாளியை விடுவிக்க இயக்கம் ஆரம்பித்தால் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் வேண்டாமே. முன்னாள் பிரதமரை படுகொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்தவர்களுக்கு பரிந்துபேசுவது தமிழர் பாண்பாடாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

click me!